தேசிய அளவிலான கட்டுரைபோட்டி: தமிழில் எழுதி முதல் இடம் பிடித்த நெல்லை மாணவி!

தேசிய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், தமிழில் கட்டுரை எழுதி முதல் இடத்தை பிடித்த நெல்லை மாணவிக்கு பராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்தியாவின் முன்னனி நிறுவனத்தில் ஒன்றான டாடா நிறுவனம் சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்…

தேசிய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், தமிழில் கட்டுரை எழுதி முதல் இடத்தை பிடித்த நெல்லை மாணவிக்கு பராட்டுகள் குவிந்து வருகின்றது.

இந்தியாவின் முன்னனி நிறுவனத்தில் ஒன்றான டாடா நிறுவனம் சிறப்பான இந்தியாவை உருவாக்குதல் என்ற தலைப்பில் இந்தியா அளவில் கட்டுரை போட்டி நடத்தியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து 7500 கல்வி நிறுவனங்களிலிருந்து லட்சகணக்கான மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு 13 மொழிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

இதில் தமிழகத்திலிருந்து நெல்லை அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லுாரியை சேர்ந்த ஹிஸானா என்ற மாணவி கலந்து கொண்டு தமிழ் மொழியில் கட்டுரை எழுதி இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

அவருக்கு டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையில் நடந்த விழாவில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியாவை வல்லரசாக்க தனது யோசனையை தமிழ் மொழியில் கட்டுரை மூலம் அளித்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

—-அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.