ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து

சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பழைய சென்ட்ரல் சிறைச்சாலை…

சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பழைய சென்ட்ரல் சிறைச்சாலை இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 1200 மருத்து கல்லூரி மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் கல்லூரியின் விடுதியும் இங்கு தான் உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் கல்லூரி விடுதியின் பின் பக்கமுள்ள டிரான்ஸ்பார்மர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் டிரான்ஸ்பார்மர் அடுத்து அடுத்து வெடித்து தீ ஜுவாலை பரவியது. இந்த தீ மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதியிலும் பரவியது.

இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின்
அடிப்படையில் நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்து நடந்த இடத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ ரயில் பணியின் மின்சாரம் தொடர்பான பணி டிரான்ஸ்பார்மர் மாணவர் விடுதி அறையில் அருகே நடைபெற்று வருவதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவாக சரிசெய்யப்படும் என்று அவர் கூறினார்.

விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உபகரணங்கள் வைக்கும் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோன வார்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இது 3வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.