கோவில்பட்டி அருகே தீப்பெட்டி குடோனில் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

கோவில்பட்டியில் உள்ள தீக்குச்சி குடோனில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் பசுந்தனை சாலைப் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி குடோன் செய்லபட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விஜயாபுரியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் சிவகாசி பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (42), துரைச்சாமி புரத்தைச் சேர்ந்த கணேசன்(47) இருவரும் தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் முருகன் மீது நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.