சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 660-க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







