ராஜஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : மகளிர் உலகக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி! 

ஐசியுவில் 11 நோயாளிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கோமா நிலையில் இருந்ததால் முடிந்தவரை பல நோயாளிகளை ஐசியுவிலிருந்து மீட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் போராடியும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இறந்த நோயாளிகளில், இரண்டு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.