கோழிக்கோடு அருகே மீன்பிடி துறைமுகத்தில், விசைப்படகில் உணவு தயார் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வட மாநில மீன்பிடி தொழிலாளிகள் உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புதியப்பா மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த விசைபடகில் உணவு தயார் செய்யும் போது ஏற்பட்ட தீ
விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வட மாநில மீன் பிடி தொழிலாளிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் விசை படகில் இரவு மீன் பிடிக்க செல்லும் முன் சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சுமார் 20 லட்சம் பொருட்கள் சேதமாகின.
ரூபி.காமராஜ்







