கோவில்பட்டியில் இயந்திர தீப்பெட்டி ஆலையில் மின் கசிவால் மெழுகு உருகி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரில் இயங்கி வரும் நர்மதா என்ற பெயரில் மேட்ச் இண்டஸ்ட்ரியை ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்த அய்யாசாமி மனைவி நர்மதா (55) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இரவு நைட் ஷிப்டின் போது இயந்திர ஆலையில் மின் கசிவின் காரணமாக மெழுகு உருகி இயந்திரத்தில் தீ பிடித்தது உடனடியாக தொழிலாள்கள் வெளியேற்றப்பட்டனர்.
அருகில் வசிப்பவர்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் வழங்கியதால் விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து தண்ணீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ்விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மருந்து முக்கும் இயந்திரம் மற்றும் பத்து மூடை மருந்து முக்கிய தீக்குச்சிகள் தீயில் எறிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.







