மகளிர் உரிமைத் தொகை பெற கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் – தமிழ்நாடு அரசு

மகளிர் உரிமைத் தொகை பெற கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனைத்…

மகளிர் உரிமைத் தொகை பெற கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15ம் தேதி “கலைஞர் மகளிர் உரிமை தொகை “ வழங்கப்படும் எனவும் அது தொடர்பாக வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி பயனுள்ள ஒருவரும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என தெரிவித்தைருந்தார்.

இந்நிலையில் அரசு தரப்பில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவர்களது ரேசன் அட்டைகள் உள்ள ரேசன் கடைகளுக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களிடமிருந்து தேவையான விவரங்கள் பெறப்பட்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் பதிவு செய்யப்படும். அப்போது விண்ணப்பதாரர்களின் கை ரேகை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.