கிரீஸில் ரயில் விபத்து: 2 ரயில்கள் மோதிக்கொள்ளும் பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்

கிரீஸில் ரயில் விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  கிரீஸில் ஒரு பேரழிவு ரயில் மோதியதில்  48 பேர் இறந்தனர். செவ்வாய்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன் ரயில் மோதியது “துயரகரமான…

கிரீஸில் ரயில் விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கிரீஸில் ஒரு பேரழிவு ரயில் மோதியதில்  48 பேர் இறந்தனர். செவ்வாய்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன் ரயில் மோதியது “துயரகரமான மனித தவறு” என்று கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார். விபத்தின் சிசிடிவி காட்சிகள், சரக்கு ரயில் பயணிகள் ரயிலின் மீது மோதிய துல்லியமான தருணத்தைக் காட்டுகிறது.

மீட்பவர்களின் அயராத முயற்சிகள் இருந்தபோதிலும்,  உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நேரம் செல்ல செல்ல குறைந்து வருகின்றன. பல ஆண்டுகளாக, ரயில் பாதைகளின் தரத்தை குறித்த கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கப்படவில்லை என்று உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகளை கண்டு இணையவாசிகள் தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.