நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 13-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இடம்பெற வேண்டிய…

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 13-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, கருத்துக் கேட்புக் கூட்டம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்நத பிரதிநிதிகள், கால்நடைத்துறை சார்ந்த தொழில் செய்யும் சங்கங்களின் பிரதிநிகளிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற்றனர். தொடர்ந்து நாளை வணிகர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.