சுட்டெரிக்கும் கோடை வெயில்; டெல்லி அரசு அறிவித்த “CHILL” ப்ளான்…!

கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க டெல்லி அரசு புதிய வெப்பக்கால செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் வெயில் சதம் விளாசி வருகிறது. இந்த நிலையில் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க டெல்லி அரசு புதிய வெப்பக்கால செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு ‘சில் பிளான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் சிறப்புப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,

  • பேருந்து நிறுத்தங்களில் அதிக அழுத்தத்துடன் கூடிய ‘மிஸ்டிங் சிஸ்டம்’ பொருத்தப்படும்.
  • நெரிசலான பகுதிகளில் வெப்பத்தைக் குறைக்க ‘ஆன்டி-ஸ்மாக்’ துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும்.
  • பள்ளிக் குழந்தைகள் வெயிலினால் உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்க, அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் முன் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்படும். மேலும் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.
  • கடுமையான வெப்பம் நிலவும்போது, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளிப்புற பணிகளை நிறுத்த உத்தரவு
  • தொழிலாளர்களுக்குத் தண்ணீர், தொப்பிகள், துண்டுகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் வழங்கப்படும்.
  • கட்டிடங்களின் உட்புற வெப்பத்தைக் குறைக்கப் பிரதிபலிப்பு பூச்சுகள்  பூசப்படும்.
  • பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் பறவைகளுக்காகத் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படும்.
  • தெரு விலங்குகளுக்காகத் தனி தண்ணீர் மையங்கள் அமைக்க டெல்லி ஜல் போர்டு மற்றும் DDA அமைப்புகளுக்கு உத்தரவு
  • கோடை காலத்தில் மின் தேவை 9,000 மெகாவாட்டைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மருத்துவமனைகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணிநேர தடையற்ற மின்சாரம் வழங்க மின் நிறுவனங்களுக்குக் உத்தரவு
  • வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் உதவி தேவைப்பட்டால் 1077, 1070 அல்லது 112 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும் டெல்லி முழுவதும் உள்ள 339 சுகாதார மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் வெப்பத்தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்காகத் தனி ‘குளிர் அறைகள்’ அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.