முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக சட்டமன்றத் தேர்தலுக்கான பிராச்சாரத்தில் ஈடுபட்ட போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தான் பதவியேற்று 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில், முதல்வராக பதவியேற்ற பின் மனுக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன்கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனி பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள்து புகாரை http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்தில் அளிக்கலாம். மேலும், புகார்கள் மீது அளிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement:

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

Jayapriya

துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!

Jeba

தரமற்ற பிபிஇ கிட்: தலைமை செவிலியர் வெளியிட்ட ஆடியோ!

Vandhana