‘தேசிங்கு ராஜா -2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! – படக்குழு அறிவிப்பு!

இயக்குநர் எழில் இயக்கும் தேசிங்குராஜா -2′ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு…

இயக்குநர் எழில் இயக்கும் தேசிங்குராஜா -2′ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தேசிங்குராஜா -2′ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.