ஜூலையில் ‘கூலி’ படப்பிடிப்பு! அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.…

‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில், தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்நிலையில், ‘கூலி’ திரைப்படம் பற்றிய அப்டேட் ஒன்றினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், மேக்கப் டெஸ்ட் எடுத்த போது நடிகர்  ரஜினிகாந்த் உடன் தான் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.