23-வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. நள்ளிரவு 12: 30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜெண்டினா – ஸ்பெயின் அணிகள் மோதின. இப்போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்றது.
கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆனால் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்த போதும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் இன்றி முடிவடைந்தது. மேலும் போட்டியின் 90 நிமிடங்கள் முடிவிலும் யாராலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயினுக்கான முதல் கோல் கிடைத்தது. இதனை அந்த அணியின் வீரர் பெர்ரான் டோரஸ் அடித்தார். இதனால் போட்டியில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து சமநிலை கோலுக்காக அர்ஜென்டினா கடுமையாக போராடியது. ஆனால் சிறப்பாக தற்காப்பில் ஈடுபட்ட ஸ்பெயின் வீரர்களால் கோலடிக்க அர்ஜெண்டினாவால் முடியவில்லை.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
முன்னதாக 2010-ம் ஆண்டு முதல்முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது என்பது குறிப்படத்தக்கது. இது ஸ்பெயின் வெல்லும் 2-வது உலகக் கோப்பையாகும்.




