நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை.20) தொடங்குகிறது. அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு, சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.




