FIFA 2026 : ஜோர்டானை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி…!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜோர்டானை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது.

2026-ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்க, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் அர்ஜன்டினா-ஜோர்டான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தன.

இந்த நிலையில் ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜண்டினா வீரர் கியோவானி லோ செல்கோ ஃப்ரீ கிக் மூலம் முதல் கோலை அடித்தார். இதனையடுத்து 31-வது நிமிடத்தில் அர்ஜன்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்பை பயன்படுத்தி மார்டினஸ் லாவகமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவு அர்ஜன்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55-வது நிமிடத்தில் ஜோர்டான் அணியின் முசா அல்தாமரி கோல் அடித்தார். இதனிடையே முதல் பாதியில் பெஞ்சில் இருந்த மெஸ்ஸி இரண்டாவது பாதியின் 59-வது நிமிடத்தில் களத்திற்கு வந்தார். சிறப்பாக ஆடிய மெஸ்ஸி 80-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றிபெற்றது. இதன் மூலம் அர்ஜண்டினா அணி 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் ஜே பிரிவில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.