2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் மற்றும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுகள் முடிந்து தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் அர்ஜண்டினா – எகிப்து அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே எகிப்து அணி அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் எகிப்து அணியின் மராவன் அட்டியா அசிஸ்ட்டில் யாசர் இப்ராகிம் கோல் அடித்தார். இதனால் எகிப்து அணி 1-0 என முன்னைலை பெற்றது. இதனிடையே ஆட்டத்தில் 20-வது நிமிடத்தில் அர்ஜண்டினா அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்பை எதிர்பாராத விதமாக மெஸ்ஸி தவர விட்டார். இதனையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கி 67-வது நிமிடத்தில் எகிப்து அணியின் முஸ்தஃபா ஸிகோ கோல் அடித்தார். இதனால எகிப்து அணி 2-0 என முன்னிலைப் பெற்றது. ஆரம்பம் முதலே கோல் அடிக்க தடுமாறிய அர்ஜண்டினா அணி ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய ரொமேரோ இந்த கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மான்டியா அசிஸ்டில் மெஸ்ஸி ஒரு கோல அடுத்தார். இதனால் அர்ஜண்டினா 2-2 என சமன் செய்தது.
இந்த நிலையில் 90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் அர்ஜண்டினாவின் மார்டினெஸ் அசிஸ்ட் செய்ய ஃபெர்னான்டஸ் அசத்தலான கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா 3-2 என முன்னிலை பெற்றது. இதனையடுத்து போட்டி முடிவுக்கு வந்தது. அர்ஜண்டினா அணி த்ரில் வெற்றி பெற்று உலக கோப்பை காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.




