என்னை விமர்சிப்பதில் காங்கிரசில் கடும் போட்டி- பிரதமர் மோடி ஆவேசம்

100 தலை கொண்ட ராவணன்? என்று காங்கிரஸ் என்னை விமர்சித்துள்ளது. இதற்கு மக்கள் தாமரைக்கு வாக்களித்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என பிரதமர் மோடி ஆவேசமாக கூறியுள்ளார். குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள…

100 தலை கொண்ட ராவணன்? என்று காங்கிரஸ் என்னை விமர்சித்துள்ளது. இதற்கு மக்கள் தாமரைக்கு வாக்களித்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என பிரதமர் மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.

குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் அடுத்த கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி காந்திநகர் மாவட்டம் கலோலில் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு குடும்பத்தை நம்புகிறார்கள். ஜனநாயகத்தை அல்ல. ஒரு குடும்பம், அந்தக் குடும்பமே அவர்களுக்கு எல்லாமே தவிர, ஜனநாயகம் அல்ல.

மோடியை குறித்து யார் அதிகமாக விமர்சிப்பது என்று காங்கிரஸ் கட்சியில் தினமும் போட்டி நிலவுகிறது. நான் காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். இது ராம பக்தர்களின் குஜராத் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது. “ராமபக்தர்களின்” இந்த நிலத்தில், “மோடி 100 தலை கொண்ட ராவணன்” என்று மல்லிகார்ஜூன கார்கே என்னை விமர்சித்துள்ளார். இதற்கு வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் 2ம் கட்ட தேர்தலில் மக்கள் தாமரைக்கு வாக்களித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.