வள்ளியூரில் உள்ள புனித பாத்திமா தேவாலயத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு துாத்துக்குடி மறை மவாட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஜெபமாலை பவனியும் மறையுரை நற்கருணை ஆசீரும் தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 9-ஆம் நாள் திருவிழாவான வரும் 12-ம் தேதி சப்பர பவனி நடக்க இருக்கிறது.
—–அனகா காளமேகன்







