முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் – நாராயண பாபு

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.

மருத்துவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் நீட் தேர்வுக்கான கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில், இயக்குநர் நாராயண பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, மருத்துவர்கள் கலந்தாய்வு 36 மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது. இதில் 1553 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 90 முதல் 95% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஊட்டி, திருப்பூர், நாகை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 100 சதவிகிதம் மருத்துவர்கள் நிறப்பட்டுள்ளனர்.கொரோனா காலக்கட்டத்தில்  மருத்துவர்கள் பலர் பணி சூழ்நிலை கருதி பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டியிருந்தனர்.தற்போது மீண்டும் அவர்களைப் பழைய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும், நீட் தேர்வுக்கான கலந்தாய்வு குறித்த தகவல் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், ஒன்றிய அரசு நீட் தேர்வு டேட்டா அனுப்பியவுடன் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதைத் தடுக்க புதிய  நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஒட்டுமொத்த கட்டணங்களையும் அரசிடமே செலுத்தலாம், கல்லூரியில் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை

Halley Karthik

ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!

Jayapriya

இந்தியப் பங்குச் சந்தை; மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

Arivazhagan Chinnasamy