ஈரோட்டில் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்!

ஈரோடு மாவட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில், முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கி வரக்கூடிய பவானி சாகர் அணையில் இருந்து, பிரதான கால்வாயாக கீழ்பவானி கால்வாய்…

ஈரோடு மாவட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம்
முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கி வரக்கூடிய
பவானி சாகர் அணையில் இருந்து, பிரதான கால்வாயாக கீழ்பவானி கால்வாய்
உள்ளது. இந்த கால்வாய் ஈரோடு ,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை
உள்ளடக்கிய , சுமார் 2 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி
பெற்று வருகின்றன.

124 மைல் கொண்ட இந்த கால்வாயின் கரைகளை பலப்படுத்தவும் , தடுப்புகள்
அமைக்கவும் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் ரூ. 713 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து
பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இந்த
பணிகளை கிடப்பில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கீழ்ப்பவானி கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

மேலும், இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. பணிகளை
உடனடியாக துவங்க வலியுறுத்தி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களில்
ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகளை தொடங்க கீழ்பவானி ஆயக்கட்டு பாசன நில
உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் வருகிற மே 1ம் தேதி முதல் இந்த பணிகளை தொடங்க
வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை செயல்ப்படுத்த கோரி, ஈரோடு கோணவாய்க்கால்
பகுதி நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள கீழ்பவானி
வடிநில கோட்ட அலுவலகம் முன்பு, விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.மேலும், மே1ம் தேதி முதல் திட்டத்தை தொடங்க வில்லை என்றால்,
மே 5 ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள்
தெரிவித்தனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.