முக்கியச் செய்திகள் இந்தியா

நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்: அமித் ஷா ஆலோசனை!

டெல்லியில் நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 71வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை எதிர்க்கட்சியினர் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புலனாய்வுத் துறை மற்றும் “ரா” பிரிவு தலைவரும் பங்கேற்றனர்.

இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் போரட்டம் தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!

Halley karthi

பைடன் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

Vandhana

மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்

Saravana Kumar

Leave a Reply