வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில்…

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் 2019-20-21 வரை மூன்று ஆண்டுகளுக்கு உண்டான பயிர் காப்பீட்டுக்கு பிரீமியம் தொகையை விவசாயிகள் சரியாக செலுத்தியுள்ளனர். ஆனால் இதுவரையில் இந்த பயிர்க்காப்பீட்டிற்கான தொகை 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை எனத் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

திருவேங்கடம் தாலுகாவில் சுமார் 74,000 ஏக்கர் மானாவாரி விளை நிலங்கள் பயிரிடப்பட்டுள்ளது. அதில் 45,000 ஏக்கர் மக்காச்சோளம், 15,000 ஏக்கர் உளுந்து , 5 ஆயிரம் ஏக்கர் பருத்தி ஆகியவை நோய் தாக்குதலாலும் அதிக மழை பொழிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மனு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.