சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை

சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட…

சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட 38 பேர் தங்கப் பதக்கங்களை வென்றனர். இந்நிலையில், ரயில் மூலம் சென்னை திரும்பிய சிலம்பம் வீரர்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து சிலம்பம் கூட்டமைப்பு ஆசான் ப்ரித்திவிகுமார், உலகம் முழுவதும் சிலம்பம் பரவி வருவதால் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை எனத் தெரிவித்தார். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் ஆசான், 10 ஆயிரம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மூத்த ஆசான்களுக்கு அரசு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், ஒலிம்பிக்கில் சிலம்பம் போட்டியை சேர்க்க அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.