பணியை தாண்டி சேவை: காவலருக்கு குவியும் பாராட்டு

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை பணியில் இருந்த காவலர் ஒருவர் சரி செய்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் கூட்டு குடி…

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை பணியில் இருந்த காவலர் ஒருவர் சரி செய்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் கூட்டு குடி நீர் திட்ட பணிக்காக சாலை அருகே பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படமால் உள்ள நிலையில் இன்று காலை சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தும் அதனை கண்டும்காணாமல் சென்று கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர காவலர் அசோக் சாலை யோரம் கிடந்த கற்களை கொண்டு தனி ஒரு மனிதனாக சரி செய்து கொண்டு இருந்தார் அதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் அவருடன் சேர்த்து அப்பள்ளத்தை மூடினர். அதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply