விவசாயி உயிரிழப்புக்கு காரணமான நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி அருகே தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன்பெற்று வாங்கிய டிராக்டரை நிதி
நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்ததால் மனமுடைந்து விவசாயிஉயிரிழப்பு
கொண்டசம்பவம் குறித்து உரிய விசாரனை செய்யக்கோரி விவசாயிகள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியையடுத்த தேவனூர் கிராமத்தை சேர்ந்த இளம்
விவசாயியான சின்னதுறை (22) தனது விவசாயதேவைக்காக தனியார் (ஸ்ரீராம்) நிதி
நிறுவனம் மூலமாக கடன் உதவி பெற்று டிராக்டர் வாங்கி உள்ளார். இந்நிலையில்
கடன் தொகையை சரியாக செலுத்தாததால் நிதி நிறுவன அதிகாரிகள் விவசாயி சின்னதுறையை தரக்குறைவாக பேசி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்து விவசாயி சின்னதுரை கடந்த 5- ஆம் தேதி உயிரிழப்பு கொண்டார். தனியார் நிதி நிறுவன இந்த வன்முறை செயலை கண்டிக்கும் வகையில் இன்று விழுப்புரம் மாவட்டம் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் தனியார் நிதி நிறுவனத்துக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பிஉயிரிழப்புக்கு காரணமாக இருந்த நிதி நிறுவனத்தின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயி சின்னதுரைகுடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.







