முக்கியச் செய்திகள் இந்தியா

உயர்கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? மத்திய நிதியமைச்சர் பதில்

உயர்கல்விக்காக பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் விளக்கமளித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன், மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டும் இருக்க கூடிய உயர்கல்விக்காக கடன் பெற்ற ஏழை மாணவர்களின் கடனை ஏன் ரத்து செய்ய கூடாது? உயர்கல்வி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யுமா? என கேள்வியே எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெருநிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றார்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய்! பொய்! என கூச்சலிட்டு போது பொய் என்ற வார்த்தை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாது அதனை நீக்க வேண்டும் என நிர்மலா சீத்தாராமன் கோரினார்.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல உள்நோக்கத்துடன் எதிர்கட்சியினர் பேசுகிறார்கள், இது முற்றிலும் தவறு. பெருநிறுவனங்களிடம் இருந்து இப்போதும் பணம் வசூலிக்கப்பட்டு, அதை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’இந்த நாடு சனாதன தர்மம் உடையது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

EZHILARASAN D

உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு

Dinesh A

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor