#Coolie திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிப்பதை உறுதி செய்து போஸ்டர் வெளியிட்டது படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிப்பதை உறுதி செய்துள்ள படக்குழு அவரது கதாபாத்திர அறிமுக போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிப்பதை உறுதி செய்துள்ள படக்குழு அவரது கதாபாத்திர அறிமுக போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், சைமன் என்கிற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்கிறார். நாகர்ஜுனாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முன்னதாக மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிப்பதையும் கூலி படக்குழு உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.