முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன. இவர் வெகுநாளாக தலைமறைவாகியிருந்த நிலையில், குணாவை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தது. இதனை அடுத்து அவரது மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனது கணவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாகக் கூறிய அவர், படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த மாதம் படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், கூட்டாளிகள் மூலம் படப்பை குணா குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, அவரின் கூட்டாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டினர். இந்த நிலையில் முக்கிய கூட்டாளியான மாம்பாக்கம் பிரபுவையும் அவருக்கு உதவிகள் செய்துவந்த போந்தூர் சேட்டுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் படப்பை குணாவின் கூட்டம் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

’அந்த ஹீரோ படத்துல நான் நடிக்கலை’: ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு

Halley Karthik

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Jayasheeba

முதல்வரின் கரங்களை மாணவர்கள் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

EZHILARASAN D