#Chennai | பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும்…

Famous rowdy Kaka Thoppu Balaji shot dead in encounter!

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இன்று (செப். 18) வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார், காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கியதால், போலீசார் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். அவரட்ஜி உடல் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். அவர் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு, போலீசாருக்கு போக்கு காட்டி வந்துள்ளார். கடைசியாக இன்று வியாசர்பாடியில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.