33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர்!

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மலையாள சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர். இவர், மகதீர்த்தம், முத்துகவ், அச்சையன்ஸ், கடலு பரஞ்ச கத உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், சந்தனமழ, ஆத்மசகி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். அபர்ணாவுக்கு சஞ்சித் என்கிற கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா பகுதியில் அமைந்துள்ள தன் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணியளவில் அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நிகழ்ந்த போது வீட்டில் அவரின் அம்மாவும் தங்கையும் மட்டுமே இருந்துள்ளனர். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. நடிகை அபர்ணா நாயர் தற்கொலையின் பின்னணி குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும், அபர்ணா நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்-முதலமைச்சர் ஸ்டாலின்

Web Editor

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

Web Editor

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்

Halley Karthik