புர்ஜ் கலிஃபாவில் “ஜவான்” டிரைலர்! ஆச்சரியத்துடன் பார்த்த அட்லீ, அனிருத்!

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் அட்லீ பகிர்ந்துள்ளார். விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி…

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் அட்லீ பகிர்ந்துள்ளார்.

விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். ஷாருக்கான் நாயகனாக நடித்த இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் அனிருத் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். வரும் செப்டம்பர் 7-ம் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளது. நேற்று முன்தினம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

இசை வெளியீட்டு விழாவை முடித்த படக்குழுவினர், உடனே துபாய் பறந்து சென்றனர். அங்கு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா அட்லீ, இசையமைப்பாளர் அனிருத் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது புர்ஜ் கலிஃபாவில் டிரைலர் திரையிடப்பட்டபோது ஆச்சர்யத்துடன் பார்த்த அனிருத்தும், அட்லீயும் தங்கள் பெயர் அதில் வந்தபோது நெகிழ்ந்து நின்றனர். இதையடுத்து பேசிய அனிருத், துபாய்க்கு பலமுறை வந்திருக்கிறேன். இதே ரோட்டில் நடந்து சென்றிருக்கிறேன். ஆனால் தற்போது புர்ஜ் கலிஃபாவில் என் பெயரை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.

இந்த தருணத்தை ஏற்படுத்தி தந்த ஷாருக்கானுக்கு மிக்க நன்றி என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார் அனிருத். அதேபோல் அட்லீயும் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.