இபிஎஸ்-ன் உறவினர் வீட்டில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

ஈரோட்டில் N.R கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை வருமான வரித்துறை சோதனை நடைபெறவுள்ளது.

ஈரோட்டில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. 

ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் N.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான, என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்தக் கட்டுமான நிறுவனம் தமிழகத்தின் சென்னை, கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் வட மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களைப் பெரிய அளவில் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஈரோடு என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராமலிங்கத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் பண பரிமாற்ற விபரங்கள், வருமான வரி செலுத்திய விபரங்கள் குறித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், கணக்கில் வராத சொத்துக்கள், ரொக்கம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்றும் N.R கன்ஸ்ட்ரக்ஷனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.