குடும்ப தகராறு; இளம்பெண் உயிரிழப்பு முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, குடும்ப தகராறு காரணமாக, இளம்பெண் ஒருவர் தீக்குளித்து  உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள மறவன் குடியிருப்பைச் சேர்ந்த இளம்பெண் லிசாவும்,…

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, குடும்ப தகராறு காரணமாக, இளம்பெண் ஒருவர் தீக்குளித்து  உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள மறவன் குடியிருப்பைச் சேர்ந்த இளம்பெண் லிசாவும், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணுவும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காரணமாக 3 மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். மார்த்தாண்டத்தில் வீடு எடுத்து தம்பதியினர் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவன் அனுசரணையாக இல்லாமல், தினசரி அடித்து உதைத்து வந்ததால் விரக்தியடைந்த லிசா, உடலில் மண்ணெண்ணை ஊற்றி, தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்றார். 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.