‘பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் முஸ்லிம்’ என பரவும் பொய் வீடியோ – AajTak கூறுவது என்ன?

This news is Fact Checked by Aajtak பட்டப்பகலில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முஸ்லிம் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.…

This news is Fact Checked by Aajtak

பட்டப்பகலில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முஸ்லிம் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுவிட்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டதாகவும் , அப்பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணிடம் முஸ்லிம் ஆண் ஒருவர் தகாத முறையில் தொட்டுச் சென்றதாக அந்த வைரலான வீடியோவின் கேப்சனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் சிசிடிவி காட்சிகளில், ஒரு பெண் தெருவில் தனது குழந்தையுடன் நடந்து வருவதை காண முடியும் . சில வினாடிகளில் ஒரு ஆண் ஒரு ஸ்கூட்டரில் இருவரையம் கடந்து, அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுவிட்டு கடந்து செல்லும்படி இடம்பெற்றிருந்தது.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் வீடியோவைப் பகிர்ந்த சில @pushkarsinghdhami.uk எனும் உத்திரகாண்ட் முதலமைச்சரின் கணக்கை டேக் செய்து “ இந்த ஜிஹாதிக்கு அவனது ஏழு தலை முறைகள் நினைவில் வைத்திருக்கும் வகையில் தண்டனையை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பெண்ணை கிண்டல் செய்யும் நபர் ஒரு முஸ்லீம் அல்ல. இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று ஆஜ்தக் உண்மை சோதனையில் கண்டறிந்துள்ளது.

உண்மை சரிபார்ப்பு :

வைரலான வீடியோ குறித்து முக்கிய வார்த்தை பயன்படுத்தி கூகுளில் தேடியபோது நவம்பர் 12, 2024 தேதியிட்ட “தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் “இலிருந்து இந்த சம்பவம் பற்றிய செய்தி கிடைத்தது. செய்தியில், வைரலான வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டுடன், டேராடூனில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை பாலியல் சீண்டல் செய்த இளைஞரை போலீசார் கைது செய்ததாக கூறியுள்ளது. இது குறித்து டேராடூன் காவல்துறையும் நவம்பர் 12ஆம் தேதி ட்வீட் செய்திருந்தது. அந்த ட்வீட்டில், இந்த விஷயம் படேல்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்றும் அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.


இது குறித்து ஏபிபி நியூஸ் மற்றும் ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. இதன்படி குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் கிஷன் சிங் என்றும், அவரது தந்தையின் பெயர் கோவர்தன் சிங் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் லான்ஸ்டவுன். பவுரி கர்வாலில் வசிப்பவர். போலீசார் அவரை வாகனத்துடன் கைது செய்தனர். இந்த தகவலை உறுதி செய்ய படேல்நகர் காவல் நிலைய SHO கமல்குமாரிடம் பேசினோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஹிந்து என்றும் முஸ்லிம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் வகுப்புவாத கோணம் இல்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் சீண்டல் செய்த சம்பவம் போலி வகுப்புவாத கூற்றுக்களோடு பகிரப்பட்டுள்ளது என்பது இங்கே தெளிவாகியுள்ளது.

முடிவு :

பட்டப்பகலில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்த நபர் முஸ்லிம் ஆண் என பரவும் வீடியோவை ஆராய்ந்ததில் அவர் இந்து சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் அவர் முஸ்லிம் அல்ல என்றும் உறுதியாகியுள்ளது. இது டேராடூனில் நடந்த சமீபத்திய சம்பவம் என்பது தெளிவாக உள்ளது.

Note : This story was originally published by Aajtak and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.