வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியீடு – ஜார்கண்ட் இளைஞர் கைது

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவரை திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள்…

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவரை திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தமிழ்நாட்டில், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை, சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு தவறாகக் கூறப்படுகிறது என்று மறுப்பு தெரிவித்தது.

இவ்வாறு பரவிய செய்தி வடமாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகார் மற்றும் ஜார்கண்ட் குழுவினர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதையும் படியுங்கள் : ஆசிய திரைப்பட விருதுகளை அள்ளி வருமா பொன்னியின் செல்வன்?

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில்
பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக
கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பியதாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.