முக்கியச் செய்திகள் தமிழகம்

போலி பாஸ்போர்ட் வழக்கு: உயர்நீதிமன்ற “Q பிரிவு” காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கை

“போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 14 நபர்கள் மத்திய அரசு ஊழியர்கள், 5 பேர் தமிழக அரசு ஊழியர்கள், ஒரு
பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 நபர்கள் உள்ளனர்” என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

“Q பிரிவு” காவல் துறை முதற்கட்ட அறிக்கையை மதுரை கீழமை நீதிமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளது. மேலும் கீழமை நீதிமன்றத்தில் 41 குற்றவாளிகள் மீதான
விசாரணை தொடங்கப்பட உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போலி பாஸ்போர்ட் வழக்கை 3 மாதத்தில் “Q பிரிவு” காவல் துறைத் தலைவர்
மேற்பார்வையில் Q பிரிவு காவல் துறையினர் விசாரணையை முடிக்க நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதனை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவு பிறப்பித்தது.

மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக 53
வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை மட்டுமே
பதியப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இவர்கள் போலியான
இருப்பிட சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்தது தெரியவந்தது.

இதில் அதிகமான இலங்கை அகதிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அகதிகளாக உள்ள இவர்கள் எந்த நாட்டிற்கும் செல்ல முடியும், சட்ட விரோத நடவடிக்கை நடைபெறுவதற்கும்
வாய்ப்புள்ளது. “Q” பிரிவு காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்
உள்ளனர். எனவே, போலி பாஸ்போர்ட் வழக்குகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கூறிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், போலி பாஸ்போர்ட் வழக்கை 3 மாதத்தில் “Q
பிரிவு” காவல் துறைத் தலைவர் மேற்பார்வையில் Q பிரிவு காவல் துறையினர் விசாரணையை முடிக்க உத்தரவிட்டனர்.

இதனை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரையை சேர்ந்த
முருக கணேஷன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினை
தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், 41 நபர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 14 நபர்கள் மத்திய அரசு ஊழியர்கள், 5 பேர் தமிழக அரசு ஊழியர்கள், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 நபர்கள் உள்ளனர்.

“Q பிரிவு” காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கை மதுரை கீழமை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழமை நீதிமன்றத்தில் 41 குற்றவாளிகள் மீதான
விசாரணை தொடங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல்
செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor

விண்ணை எட்டும் பெட்ரோல் விலை..100 நாட்களை கடந்தும் மாற்றம் இல்லை

G SaravanaKumar

நாளை முதல் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி

G SaravanaKumar