பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் அதிரடியாக நீக்கிய X தளம்..!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் பலவற்றை அதிரடியாக நீக்கிய X தளம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை…

பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் பலவற்றை அதிரடியாக நீக்கிய X தளம் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  5000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 6வது நாளாக தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளமான எக்ஸில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான பல போலி செய்திகள் பரவத் தொடங்கின.  ஐரோப்பிய கமிஷனர் தெர்ரி பிரட்டோன் டிவிட்டரில் வெளியாகும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான போலி செய்திகளை நீக்குமாறு எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கிற்கு கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கென தனி குழு அமைத்து போலி செய்திகள் பலவற்றை நீக்கியுள்ளதாக எக்ஸின் தலைமை செயல் அதிகாரி லெண்டா எக்காரினோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.