குடிபோதையில் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கபிலர். இவரது மகன் நெப்போலியன் மீது அவரது மனைவி அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, நெப்போலியன் மனைவி அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பேரில் கபிலர் அவரது மகன் நெப்போலியன் மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை புகார் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி நேற்று ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, கபிலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியை என் குடும்பத்தார் மீது நீ வழக்குப் பதிவு செய்யக்கூடாது. நான் யார் தெரியுமா? தொலைச்சிபுடுவேன்! நானும் நீதிபதி தான். ஈ.பி. விஜிலென்ஸில் இருக்கிறேன் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; சி.பி.சி.ஐ.டி எச்சரிக்கை’
அப்போது அவர் குடிபோதையிலிருந்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரை மிரட்டியதால் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமசாமியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் புகார் மீது இதுவரை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது மகளிர் காவல் நிலையம். கபிலர் மீது ஈபி-யில் வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் நீதிபதியும் இல்லை என்று தெரியவந்துள்ளது.