குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஜெகதீப் தங்கம் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர்.
குடியரசு துணை தலைவருக்கான பதவி காலம் இந்த மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய குடியரசு துணை தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
குடியரசு துணை தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் கடந்த மாதம் 18ந்தேதித பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.
இதேபோல் எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா கடந்த மாதம் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத கட்சியின் தலைவர் சரத்பவார், மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் உடனிருந்தனர்.