முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க சபாநாயகருக்கு எதிராக பொருளாதார தடை…சீனாவிற்கு அமெரிக்கா கண்டனம்…

தைவானுக்கு சென்றதற்காக அமெரிக்க  நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

தைவான் தங்களை தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில், அந்நாட்டை தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தைவானுக்கு செல்ல வேண்டாம் என நான்சி பெலோசியை  சீனா பல முறை எச்சரித்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அவர் அந்த பயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டு பேசிய சீன  வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, நான்சி பெலோசியின் தைவான் பயணம், தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தீவிரமாக தலையிடுவது போன்றது எனக் கூறினார். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையிலும் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தலையிட்டிருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே  தைவான் விவகாரத்தில் சீனாவின் அத்துமீறலான நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவிற்கான சீன தூதர் கின் காங்கை வெள்ளை மாளிகைக்கு அழைத்து சீனாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை குழந்தைகள் காப்பகத்தில் போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கண்டெடுப்பு

Vandhana

காலணி வீச்சு சம்பவம்: திமுகவினர் அமைதி காக்க வேண்டுகோள்

Jayakarthi

பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!

Vandhana