தீபாவளியை முன்னிட்டு நாளை நியாய விலைக் கடைகள் இயங்கும்!

தீபாவளியை முன்னிட்டு நாளை நியாய விலைக் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதுடன், முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை நாளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் நியாய விலைக் கடைகள் செயல்படுமா என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு ஏதுவாக, இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை (06.11.2026) தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.