நடிகர் அல்லூ அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நடிகர் அல்லூ அர்ஜீன் புஷ்பா என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரங்களை கடத்துவது தொடர்பான சம்பவங்களை மையப்படுத்தி இக்கதையின் கரு அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் அல்லூ அர்ஜீன் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். மேலும் இத்திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அவர் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதால் விலகியதாகத் தெரிகிறது. இந்நிலையில் நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.







