மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் மாஸ்டர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே ஏகோபித்திய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் இதை #VaathiComing100MViews என்ற ஹேஸ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வைகளை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







