முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் ஜெர்மன் செயலி

ஜெர்மன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள, ஸ்மார்ட் போன் செயலி மூலம் கொரோனா இருப்பதை கண்டு பிடிக்க முடியும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

செமிக் ஆர் எப் ( Semic RF) என்ற ரஷ்ய நிறுவனம், செமிக் ஐ ஸ்கேன் (Semic EyeScan) என்ற, செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியை ஸ்மார்ட் போனில் தரவிக்கம் செய்து, நமது கேமிராவில் புகைப்படம் எடுத்தால், சமந்தப்பட்டவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை இதுவே கண்டறிந்துச் சொல்லும். கொரோனா பாதிப்பின் முக்கிய அறிகுறிகளில் கண்கள் வீங்கி இருப்பதும் ஒன்று. இதை ’பிக்ங் ஐ’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படம் இந்த அறிகுறியை கண்டறிகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்த செயலி கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து எடுக்கப்பட்ட வேறுபட்ட 20 லட்ச பிங்க் நிற மாதிரிகளை கொண்டது. 70,000 பேரிடம் இந்தச் செயலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இந்த செயலி 95 சதவிகிதம் துல்லியமாக கணிக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயலி அடுத்த மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உல்ஃகேங் குர்பர் ( Wolfgang Gruber)தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

Karthick

பயோ டீசல் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக புகார்!

Ezhilarasan

இந்த தேர்தல் திராவிடத்தை காப்பாற்றும் போர் – மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan