வாட்ஸ் அப் வெப்பில் காண்டாக்ட், ப்ரோஃபைல் போட்டோவை மறைக்க முடியுமா?

வாட்ஸ் அப் வெப்பில் WA Web Plus for WhatsApp என்ற க்ரோம் எக்ஸ்டென்ஷன் பல முக்கிய அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.  அலுவலகங்களில் ஒருவருக்கொருவர்…

வாட்ஸ் அப் வெப்பில் WA Web Plus for WhatsApp என்ற க்ரோம் எக்ஸ்டென்ஷன் பல முக்கிய அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் குறித்து இந்த கட்டுரையில் காணலாம். 

அலுவலகங்களில் ஒருவருக்கொருவர் பணி குறித்த தகவல்களை பரிமாறிகொள்வதற்கு வாட்ஸ் அப் வெப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சில நன்மைகள் இருந்தாலும், பயனர்களது தனிப்பட்ட மெசேஜ்கள், அவர்களது காண்டெக்டுகளை அருகில் இருப்பவர்கள் பார்க்கும் அபாயமும் உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக ‘WA Web Plus for WhatsApp’ என்ற க்ரோம் எக்ஸ்டென்ஷன் உள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் பயனரின் காண்டாக்ட்ஸை இதன் மூலம் மறைக்க முடியும் அத்துடன் தவறுதலாக நீக்கப்பட்ட வாட்ஸ் அப் தகவல்களை மீட்கவும் முடியும். ஆனால், இதில் சிலவற்றை மட்டும்தான் இலவசமாக பயன்படுத்த முடியும். மற்றவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த க்ரோம் எக்ஸ்டென்ஷன் மூன்றாம் தரப்பால் அளிக்கப்படுவதனால் வாட்ஸ் குறுஞ்செய்திகள் குறித்த பாதுகாப்பிற்கு வாட்ஸ் அப் நிறுவனம் பொறுப்பேற்காது என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை நாம் நமது குரோம் வெப் பிரவுசரில் நிறுவ முதலில் கூகுள் வெப் ஸ்டோரில் ‘WA Web Plus for WhatsApp’ என்பதை தேடி கிடைக்கும் முடிவில் ‘Add to Chrome’-ஐ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனுடைய ‘செட்டிங்ஸ்’-ல் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்பது, ப்ரோபைல் போட்டோ, காண்டாக்ட்ஸை மறைப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் நமக்கு என்ன வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்த அம்சங்களை பயன்பாட்டாளர் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வேண்டியது போல் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது இந்த எக்ஸ்டென்ஷனின் முக்கிய சிறப்பாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.