சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பேங்கிங் கிரெடிட் மீதான வட்டியை 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டியில் 2 சதவீதம்
சலுகை அளிக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் இதனை உயர்த்தி சிறுகுறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வழங்க மத்திய அரசுக்கு திருப்பூர்
ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு
வருகிறது. பட்ஜெட் தயாரிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடல்
மேற்கொண்டர். இதில் பல்வேறு தொழில் அமைப்புகள் ஏராளமான கோரிக்கைகளை
முன்வைத்துள்ளனர்.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு 2023 – 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரனோ தாக்கம், பருத்தி தட்டுப்பாடு
காரணமாக நூல் விலை உயர்வு, உக்ரைன்-ரஸ்யா போர் உள்ளிட்ட சிரமங்களில் இருந்து
மீண்டு வரும் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசின்
பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.மத்திய அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா ஊரடங்கு மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து மத்திய அமைச்சருக்கு எங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம் குறிப்பாக ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டியில் 2 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. இதனை உயர்த்தி சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வழங்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழ்நாடு தொழில் துறை பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்துள்ள நிலையில் இந்த வட்டி சலுகை உயர்வு மிகவும் அவசியமான ஒன்றாகும். அன்னிய செலாவணி மதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தக கடன் வழங்க வேண்டும் என என்றார்.
அத்துடன், அடுத்து வரும் 3 மாதங்களில் திருப்பூர் பின்னலாடை துறையில் மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்பும் இதற்கு வழிவகை செய்யும் வழியில் மத்திய பட்ஜெட் அமையவேண்டும். என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது. இது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் என்றார்.