முக்கியச் செய்திகள் இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு -இந்திய மல்யுத்த கூட்டமைப்பு

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அவரை பதவி நீக்க கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குழு ஒன்றையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைந்திருந்தது. இதையடுத்து வீராங்கனைகள் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது.

இதன்படி, மல்யுத்த சங்க கூட்டமைப்பின் சார்பில் விளக்கம் அளித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், மல்யுத்த வீராங்கனைகளின் புகாரில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் ((பிரிஜ் பூஷன் சிங்)) மீது பழிசுமத்தும் நோக்கிலேயே இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறந்தவர் வீட்டில் கட்டுகட்டாக பணம்!

நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

எல்.ரேணுகாதேவி

ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

G SaravanaKumar