“ஷாருக்கான் யார்? அவரைப் பற்றியோ அவரது படமான பதான் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது” என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியிருப்பதுதான் ‘பதான்’ திரைப்படம். இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் மற்றொரு முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து படத்தில் இடம்பெறுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த பாடல் வீடியோ காட்சியில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்து டூயட் பாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன . இதனால் ‘பேஷாரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோனை காவி நிற பிகினியில் காட்டியதன் மூலம் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது ‘பதான்’ படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூறி இந்து அமைப்பை சேர்ந்த பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல தலைவர்கள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று படம் திரையிடப்படவிருந்த நரேங்கியில் உள்ள தியேட்டரை முற்றுகையிட்டு பஜ்ரங் தள ஆர்வலர்கள் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர். அப்போது தீவிர வலதுசாரி குழுவின் தொண்டர்கள் படத்தின் போஸ்டர்களை கிழித்து எரித்தனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம், பதான் படத்தின் போஸ்டர்களை கிழித்து பஜ்ரங் தள ஆர்வலர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஹிமந்தா , பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பற்றியோ, அவரது படமான பதான் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த பிரச்சனை தொடர்பாக பாலிவுட்டில் இருந்து பலர் அழைத்தாலும், ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. அவர் என்னை அழைத்தால், நான் அதை பரிசீலிப்பேன். சட்டம் ஒழுங்கு மீறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கான் ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று செய்தியாளர்கள் முதல்வரிடம் கூறியபோது, மாநில மக்கள் அசாமியார்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும், இந்தி படங்கள் பற்றி அல்ல என்று சர்மா கூறினார். மறைந்த நிபோன் கோஸ்வாமியின் முதல் இயக்குனரான அசாமிய திரைப்படமான ‘டாக்டர் பெஸ்பருவா – பாகம் 2’ விரைவில் வெளியாகும். இதை மக்கள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பதான்’ படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.